சொர்கம் 1


 காலை 4.45 மணி. அலாரம்‌ அடிக்கும்‌ சத்தம்‌ மண்டையை பிளந்தது. எழுந்திருக்க முடியாமல்‌ கண்கள்‌ மூடியபடியே போனை எடுத்து அலாரமை அடக்கினாள். பெருமூச்சு விட்டபடியே சோர்வுடன்‌ கண்களை திறந்தாள்‌. இன்றைய நாளும் அவளுக்கு ஓய்வு இல்லை என்பதை நினைத்து தலையை லேசாக விரக்தியில்‌ அசைத்துக்கொண்டு படுக்கையை விட்டு எழுந்தாள்‌. 


நேற்று இரவு வேலைவிட்டு வரும்போதே மணி 10.45 ஆகியிருந்தது. அதன்பின்னர்‌ வீட்டுக்கு வந்து வீட்டு வேலைகளை முடித்து படுக்க மணி 12.30 ஆகியிருந்தது. இப்போது காலை தொழுகைக்கான நேரம்‌. கணவரை எழுப்பி அவருக்கு டீ போட்டு கொடுக்க வேண்டும்‌. கடந்த 15 வருட காலமாக அவள்‌ வாழ்க்கையில்‌ நடப்பது இதுதான்‌. 

விடியற்காலை எழுந்து சேவைகள்‌ செய்து வேலைக்கு ஓடி பின்னர்‌ வீட்டுக்கு வந்து வீட்டுவேலை செய்து படுத்து தூங்க, சற்று நேரத்தில்‌ மறுநாள்‌ மீண்டும்‌ அதே சுழற்சி. 

அவளுக்கு வாழ்க்கை வெறுத்து தான்‌ போய்‌ இருந்தது. ஆனாலும்‌ ஓடினாள்‌. காரணம்‌ அவளின்‌ குழந்தை. அவனுக்கு பள்ளிக்கூட செலவிற்கும்‌ ஒரு நல்ல வாழ்கை கொடுக்கவும்‌ முடிவு செய்தே அவள்‌ வேளைக்கு செல்ல துவங்கினாள். 

21 வயதில்‌ கல்யாணம்‌ ஆனபோது அவளுக்கு அலுவலகம்‌ செல்லும்‌ வேலையில்லை. ஆனால்‌ குழந்தை பிறந்த பின்னர்‌ கணவரின்‌ சம்பளம்‌ போதவில்லை என்பதால்‌ குழந்தையை அரசுப்பள்ளியில்‌ படிக்க வைக்கலாம்‌ என்று அவளின்‌ கணவர்‌ சொல்ல, அதெல்லாம்‌ வேண்டாம்‌ என்று அவள்‌ வேளைக்கு செல்ல துவங்கினாள். 

வீட்டில்‌ குழந்தையையும்‌ பார்த்துக்கொண்டு, வீட்டு வேலையும்‌ பார்த்துக்கொண்டு, அலுவலகத்துக்கும்‌ சென்றுவந்தாள். வாழ்க்கைக்காக ஓடியோடி இளமை பறந்தது. அப்படியே 12 ஆண்டு காலம்‌ ஓடிவிட வயது 23 ஆனது. 

வீட்டு வேலை எல்லாம்‌ முடித்துவிட்டு குழந்தையை ஸ்கூலுக்கு கிளம்பிவிட்டாள்‌. மணி 8.30 ஆனது. வெளியே கீன்‌ கீன்‌ என்று ஹார்ன்‌ அடிக்கும்‌ சத்தம்‌. அவளை வேளைக்கு அழைத்துச்செல்லும்‌ வண்டி வந்துவிட்டது. அவசரமாக துப்பட்டாவை தலையில்‌ போட்டுகொண்டு அவளின்‌ பேக்கை எடுத்துக்கொண்டு ஓடினாள்‌. 

வண்டியில்‌ ஏறி "சாரி சாரி அண்ணா" என்று சீட்டில்‌ அமர்ந்தாள்‌. பெருமூச்சி விட்டு கண்களை மூடியவள்‌ அரைமணி நேரத்தில்‌ அலுவலகம்‌ வந்த பின்னர்‌ தான்‌ கண்களை திறந்தாள்‌. 

லிப்ட்‌ எடுத்து மேலே சென்ற அவளுக்கு ஒரு சிறு அதிர்ச்சி. அங்கே அவள்‌ வேலை செய்யும்‌ இடத்தில எல்லோரும்‌ மொத்தமாக நிற்க இவள்‌ உள்ளே செல்லவும்‌. “ஹாப்பி பர்த்டே" என்று கத்த அவளுக்கு இன்ப அதிர்ச்சி. 

எல்லோரும்‌ அவளுக்கு வாழ்த்து கூற அங்கு அவள்‌ பிறந்தநாளுக்கு கேக்‌ வைத்து இருந்தார்கள்‌. அவளை அழைத்து அதன்‌ முன்னே நின்று வெட்ட சொல்ல அவள்‌ அந்த கேக்கை பார்த்தாள். 

அதில்‌ “ஹாப்பி பர்த்டே ஜன்னத்‌” என்று இருந்தது. 

ஆம்‌ அவள்‌ பெயர்‌ ஜன்னத்‌, ஜன்னத்‌ என்றால்‌ சொர்கம்‌ என்று பொருள்‌. ஆனால்‌ அவளுக்கு ஏன்‌ அந்த பெயர்‌ வைத்தார்கள்‌ என்று அவள்‌ பலமுறை நினைத்ததுண்டு. 

கேக்கை வெட்டி அனைவர்க்கும்‌ கொடுத்துவிட்டு அவளின்‌ இருக்கையில்‌ சென்று அமர்ந்தாள்‌. ஒரு நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு. வேலையே துவங்கினாள். 

அவள்‌ இத்தனை ஆண்டுகாலம்‌ உழைத்து அந்த அலுவலகத்தில்‌ அவளுக்கென்று ஒரு நல்ல பெயரையும்‌ நல்ல நிலையையும்‌ சம்பாதித்து வைத்திருந்தாள். அவள்‌ இப்போது ஒரு சிறு குழுவின்‌ டீம்‌ லீடர்‌ என்ற பொறுப்பில்‌ இருந்தாள். 

நல்ல புத்திசாலி. உதவும்‌ குணம்‌ உள்ளவள்‌. தவறு செய்தால்‌ கூட கடிந்துகொள்ள மாட்டாள்‌. அவ்வளவு சாது. எனவே அவளை வேலையில்‌ அனைவருக்குமே பிடிக்கும்‌. கொடுக்கும்‌ வேலையை அவள்‌ டீம்‌ எப்போதுமே கட்சிதமாக செய்யும்‌. காரணம்‌ வேலை இருக்கும்போது எவ்வளவு நேரம்‌ ஆனாலும்‌ கூடவே இருந்து உதவி செய்து முடிக்க வைப்பாள்‌. அவளின்‌ மனஜர்களுக்கும்‌ அவளிடம்‌ வேலை கொடுத்தால்‌ முடிந்துவிடும்‌ என்ற நம்பிக்கை இருந்தது. அவளுக்கு சிலமுறை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளும்‌ வந்தது. ஆனால்‌ அவளின்‌ கணவன்‌ வேண்டாம்‌ என்று சொல்லிவிட ஆசை இருந்தும்‌ அவற்றையெல்லாம்‌ மறுத்துவிட்டாள்‌. 

இப்படியே வாழ்க்கை ஓட சில மாதங்கள்‌ ஆனது. அலுவலகத்தில்‌ சற்று பொறுப்பு மாற்றம்‌ நேர்ந்தது. அப்போது அவளுக்கு மனஜர்கள்‌ மாறினார்கள்‌. அன்று காலை புதிய மேனேஜர்‌ அறிமுகம்‌ செய்ய ஒரு சிறு மீட்டிங்‌. அங்கே அணைத்து அணியின்‌ வழிநடத்துனர்களும்‌ கூடியிருக்க அந்த அறைக்குள்‌ அவனும்‌ பழைய மானஜரும்‌ நுழைந்தார்கள்‌. 

உள்ளே வந்த பழைய மேனேஜர்‌ "ஹலோ. வெல்கம்‌ மிஸ்டர்‌ ஹரிஷ்‌ உங்களோட புது மேனேஜர்‌" என்றார்‌. 

எல்லோருக்கும்‌ லேசான குழப்பம்‌ மற்றும்‌ சலசலப்பு. காரணம்‌ அவன்‌ பார்க்க மிக இளமையாக இருந்தான்‌. இந்த வயதில்‌ இத்தனை பெரும்பொருப்பா என்ற குழப்பம்‌ ஜன்னத்கும்‌ இருந்தது. 

அப்போது தான்‌ பழைய மேனேஜர்‌ மேலும்‌ பேச துவங்கினார்‌. 

"ஹரிஷ்‌ ரொம்ப சின்ன வயசுலயே வெளிநாட்டுக்கு போய்‌ MBA படிச்சிட்டு அங்கேயே ஓருவருஷம்‌ வேலை பார்த்தவர்‌. இப்போ நம்ம கம்பெனில சேர்ந்துருக்காரு. நீங்க எல்லாரும்‌ அவருக்கு தகுந்த ஒத்துழைப்பு குடுக்கணும்‌" என்றார்‌. 

பின்னர்‌ ஹரிஷும்‌ பேச கடைசியில்‌ "உங்களுக்கு ஏதாவது கேள்விகள்‌ இருக்கா?" என்று கேட்க கூட்டத்தில்‌ இருந்த சுவேதா என்ற ஒருத்தி "உங்களுக்கு கல்யாணம்‌ ஆயிடுச்சா?" என்றாள். 

ஹரிஷ்‌ சிரித்துக்கொண்டே "இல்லை" என்றான்‌. 

மற்றொருவன்‌ "உங்க வயசு என்ன சார்‌?" என்றான்‌. 

"28" என்று பதில்‌ வர, அந்த மீட்டிங்‌ நிறைவேறியது. 

ஹரிஷின்‌ செயல்கள்‌ எல்லோரையும்‌ வியப்பில்‌ ஆழ்த்தியது. அவன்‌ நேரத்துக்கு வரவேண்டும்‌ என்றெல்லாம்‌ சொல்ல மாட்டான்‌. வேலையை முடித்து கொடுத்தால்‌ போதும்‌ மற்றும்‌ எல்லோரையும்‌ கனிவாக நடத்தினான்‌. அந்த ஊதிய உயர்வு வேளையில்‌ அனைவர்க்கும்‌ நல்ல உயர்வும்‌ பாராட்டுகளும்‌ கிடைத்தது. அவனின்‌ நிழலில்‌ வேலை பார்த்த அணைத்து டீமுக்கும்‌ சந்தோஷம்‌. ஜன்னத்துக்கும்‌ அவனுக்குமே ஒரு நல்ல நட்பு இருந்தது. 

அப்படியிருக்க ஒருநாள்‌ ஜன்னத்‌ லிப்ட்‌ எடுக்கும்‌ இடத்தில்‌ ஹரிஷை கண்டாள். அவனுடன்‌ சுவேதாவும் வெளியே செல்வதை பார்த்தாள். ஒருவேளை இருவரும்‌ காதலிக்கலாம்‌ என்று எண்ணினாள். ஆனால்‌ சில வாரங்களில்‌ சுவேதா அவளுக்கு கல்யாணம்‌ என்று அனைவர்க்கும்‌ பத்திரிகை கொடுக்க அதில்‌ ஹரிஷ்‌ பெயர்‌ இல்லாததை பார்த்து குழப்பமடைந்தாள். 

சுவேதாவை கூப்பிட்டு கேட்டால்‌ ஜன்னத்‌. 

"என்னடி சுவேதா அன்னைக்கு ஹரிஷ்‌ சாரோட வெளிய போறதை பாத்தேன்‌. நீ அவரை தான்‌ லவ்‌ பண்றியோனு நினச்சுட்டேன்‌."

"பிடிச்சிருக்குனு தான்‌ நான்‌ சொன்னேன்‌. ஆனா அவருக்கு கல்யாணத்துல விருப்பம்‌ இல்லயாம்‌. சோ சும்மா டேட்டிங்‌ போனோம்‌."

"அது சரி."

"நீங்களும்‌ வேணும்னா ட்ரை பண்ணுங்க அக்கா. சும்மா சொல்ல கூடாது நல்ல பண்ணுறாரு."

"ச்சீ வாயை மூடுடி. எனக்கு அப்படியெல்லாம்‌ ஆசை இல்ல."

"ஐயோ அக்கா நா அப்படி சொல்லல. ஆனா எல்லா பொண்ணுக்கும்‌ அப்படி ஒரு சுகம்‌ கிடைக்கணும்னு தான்‌ நான்‌ நினைக்குறேன்‌."

"கல்யாணம்‌ ஆனா அப்புறம்‌ புருஷன்‌ தான்‌ எல்லாம்‌ சுவேதா. போக போக புரியும்‌."

"அட போங்க அக்கா அதெல்லாம்‌ நம்மை ஏமாத்த இந்த ஆம்பளைங்க சொல்றது. அவனுங்க எல்லாம்‌ உத்தமனுங்க மாதிரி பேசுவானுங்க. அமைதியா எல்லா வேலையும்‌ பாப்பானுங்க. நமக்கு தேவையானதை நாமலே பண்ணிக்க வேண்டியதான்‌."

"ஏன்‌ இப்படியெல்லாம்‌ யோசிக்குற. நல்லதை யோசி வாழ்க்கை நல்லா இருக்கும்‌."

"நீங்க கூட தான்‌ ரொம்ப நல்லவங்க. இத்தனை வருஷம்‌ உங்களை நான்‌ இங்க பாக்குறேன்‌ நீங்க எவளோ ஒழுக்கமா இருக்குறீங்கன்னு எனக்கு தெரியும்‌. ஆனா உங்க வீட்டுல உங்களை அதுக்கு ஏற்ற படி நடத்துறாங்களா சொல்லுங்க."

"என்ன பேசுற சுவேதா. என்‌ வீட்டுல என்னை நம்புறதால தானே நான்‌ 1௦ மணிக்கு வீட்டுக்கு போனாலும்‌ என்னை கேள்வி கேக்க மாட்டேன்றாங்க."

"அது வேற விஷயம்‌ அக்கா. எனக்கு சில விஷயங்கள்‌ தெரியும்‌ உங்க கிட்ட இவளோ நாள்‌ சொல்ல வேண்டாம்‌னு நினச்சேன்‌."

"என்னனு சொல்லு சுவேதா. புரியுற மாதிரி பேசு." 

"நா சேந்த புதுசுல என்கூட ஒரு பையன்‌ வேலை பார்த்தான்‌. அவனுக்கும்‌ எனக்கும்‌ அப்போவே காதல்‌ இருந்துச்சி. அவன்‌ எப்போவும்‌ உங்களை நோட்டம்‌ விடுவான்‌. முதலில்‌ உங்களை சைட்‌ அடிக்குறன்னு நினச்சேன்‌. அப்புறம்‌ தான்‌ தெரிஞ்சுது அவன்‌ நீங்க ஏதாவது ஆம்பளை கிட்ட பேசுனா அதை யாருக்கோ சொல்லுறான்‌. அதை நான்‌ அவன்ட கேக்க அவன்‌ யாருனு சொல்லல. அப்புறமா நாங்க பிரிஞ்சுட்டோம்‌."

"என்னது.! நிஜமாவா? யாரவன்‌? யார்‌ கிட்ட சொல்றன்‌? எனக்கு குழப்பமா இருக்கு"

"கோவ படாதீங்க அக்கா. அவன்‌ இப்போ இங்க வேலை பாக்கல. ஆனா உங்கள இன்னும்‌ இங்க யாராவது நோட்‌ பண்றங்கள்னு எனக்கு தெரியலை"

இதை கேட்டதில்‌ இருந்து அவள்‌ மனதில்‌ பழகுழப்பங்கள்‌. 

'யார்‌ இந்த வேலையே செய்வது. எப்படி என்னை சந்தேக படலாம்‌. யாராக இருக்கும்‌ என்‌ கணவரா இல்லை அவரின்‌ வீட்டில்‌ இருபவர்களா.?' அவளுக்கு தலையே வெடித்துவிடும்‌ போல இருந்தது.

அன்றுமுதல்‌ அவளுக்கு யாரை பார்த்தாலும்‌ 'ஒருவேளை இப்போது இவர்‌ தான்‌ அந்த ஒற்றனாக இருக்குமோ' என்ற எண்ணம்‌. இதனால்‌ அவளால் வேலையில்‌ சரியாக கவனம்‌ செலுத்த முடியவில்லை. வேலையில்‌ தாமதம்‌. நிறைய குறைகள்‌ என்று அவளின்‌ வேலை பாதித்தது. 

இதை கவனித்த ஹரிஷ்‌ அவளை அழைத்தான்‌. என்னவென்று கேட்க அவள்‌ ஏதும்‌ சொல்லவில்லை. சரி இங்க வச்சி பேசவேண்டாம்‌ என்று மதிய உணவுக்கு வெளியே அழைத்தான்‌. முதலில்‌ சற்று தயங்கிய அவள்‌ பின்னர்‌ அவனுடன்‌ வெளியே சென்றாள். 

இருவரும்‌ ஒரு உணவகம்‌ சென்று சாப்பிட அவளுக்கு பொதுவாக அறிவுரை கூறினான்‌ ஹரிஷ்‌. 

"எல்லோருக்கும்‌ பிரெச்சனை இருக்கும்‌ நீங்க அதை வேலையில காமிச்சா அது உங்களுக்கும்‌ நலலதல்ல கம்பெனிக்கும்‌ நல்லதல்ல" என்றே சொன்னான்‌. அதை தவிர அவர்கள்‌ வேறு ஏதும்‌ பேசவில்லை. 

அன்று அவர்கள்‌ அப்படியே பேசி சாப்பிட்டுவிட்டு கிளம்ப, மதியத்துக்குமேல்‌ வேலையை கவனித்தால்‌ அவள்‌. சாயங்காலம்‌ வழக்கம்போல வேலைகளை முடித்து கிளம்ப 8 மணியானது. 

அன்று சம்மந்தமே இல்லாமல்‌ வீட்டில்‌ இருந்து மீண்டும்‌ மீண்டும்‌ போன்‌ வந்தது. 

"எங்க இருக்குற?" "எங்க இருக்குற?" என்று அவள் கணவன் கேட்க அவளும்‌ "இதோ வழியில வந்துகிட்டே இருக்கேன்‌" என்றாள். அவள்‌ பலமுறை சொல்லியும்‌ ஒவ்வரு 5 நிமிதத்துக்கு ஒருமுறையும்‌ போன்‌ வந்தது. 

ஒருவழியாக 9 மணிக்கு வீட்டுக்கு வர ஏற்கனவே குழந்தைகள்‌ தூங்கிக்கொண்டு இருந்தார்கள்‌. 

வீட்டுக்கு வந்தவள்‌ கணவனை பார்த்து. "அதான்‌ வழியில வரேன்னு சொல்லுறேனே ஏன்‌ இத்தனை முறை போன்‌ பண்ணுறீங்க?" என்றாள். 

கணவன்‌ அவளை மேலும்‌ கீழும்‌ பார்த்துவிட்டு. ஒன்றும்‌ சொல்லாமல்‌ கிளம்பினான்‌. 

இவளுக்கு எதுவும்‌ புரியவில்லை. அவள்‌ முகம்‌ கழுவ சென்றால்‌ உடைமாற்றி வெளியே வர அவளின்‌ கணவன்‌ அவள்‌ போனை நோண்டிக்கொண்டு இருந்தான்‌. அதை பார்த்த அவள்‌ குழப்பத்தோடு அங்கே சென்றாள். 

"என்ன ஆச்சுங்க.?"

"ஒண்ணுமில்லை சும்மா தான்‌ பாக்குறேன்‌."

"என்னனு சொல்லுங்க என்ன ஆச்சு."

"ஒன்னும்‌ இல்லமா நீ போய்‌ ரெஸ்ட்‌ எடு." 

அவளுக்கு அப்போது லேசான சந்தேகம்‌ வந்தது. 

'ஒருவேளை நாம்‌ இன்று ஹரிஹடன்‌ வெளியே சென்றது தெரிந்திருக்குமோ. அப்படியே தெரிந்தால்‌ தான்‌ என்ன. நான்‌ தான்‌ எதுவும்‌ தப்பாக பேசவில்லையே. ஒருவேளை இவர்தான்‌ நம்மை வேவுபார்க்கிறாரோ.' என்று எண்ணிக்கொண்டே சமையலறை சென்றாள். 

அவள்‌ சமைத்துமுடித்துவிட்டு வெளியேவர இரவு 1௦ மணியானது. வெளியே வந்து ஹாலில்‌ பார்க்க அங்கே அவளின்‌ கணவன்‌ கையில்‌ போனுடன்‌ அமர்ந்து இருந்தான்‌. 

'இவர்‌ என்ன இன்னும்‌ என்‌ போனை வைத்து பண்ணிக்கிட்டு இருக்குறாரு.' 

அருகே செல்ல, அவளின்‌ கணவன்‌ போனை அவள்‌ முகத்துக்கு முன்னே காட்டினான்‌. அதில்‌ ஹரிஷ்‌ அவனுடைய மேலுடலை இடுப்பு வரை காட்டிக்கொண்டு ஒரு போட்டோ அனுபோயிருந்தான்‌. அதை பார்த்து அவள்‌ அதிர்ந்து போனாள். 

"என்னங்க இது இவரு போட்டோ எப்படி என்‌ போனில்‌..!!" என்று தடுமாறினாள்‌. 

"உன்‌ போன்ல இருந்து நான்‌ தான்‌ மெசேஜ்‌ பண்னேன்‌. அதற்க்கு அவரு அனுப்பின போட்டோ தான்‌ இது." 

"என்ன சொல்ரீங்க! எனக்கு ஒன்னும்‌ புரியல. என்ன சொன்னீங்க? என்ன பேசுனீங்க?" 

"ஒன்னும்‌ இல்ல. உங்களை பாக்கணும்‌ போல இருக்குனு ஒரு மெசேஜ்‌ அனுப்பினேன்‌. எப்படி பாக்கணும்னு கேட்டான்‌. எப்படினாலும்‌ சரின்னு சொன்னேன்‌. இப்படி அனுப்பிருக்கான்‌."

"நீங்க என்ன பைத்தியமா? அவருக்கு ஏன்‌ அப்படி மெசேஜ்‌ அனுப்பினீங்க. என்ன ஆச்சி உங்களுக்கு?" 

"நீ அவன்கூட எந்த லட்சணத்துல பழகுரனு தெரிஞ்சுக்க தான்‌ மெசேஜ்‌ அனுப்பினேன்" 

"என்னங்க பேசுறீங்க! நா ஏன்‌ அவருகிட்ட பழகணும்‌. என்ன பண்ணி வச்சிருக்கீங்க நீங்க."

"நீ இடம்‌ குடுக்காம தான்‌ அவன்‌ இப்படி ஒரு போட்டோ அனுப்ப போறானா என்ன. சொல்லு என்ன நடக்குதுன்னு."

"நீங்க நினைக்குற மாதிரியெல்லாம்‌ எதுவும்‌ இல்லங்க அவரு என்னோட மேனேஜர்‌ அவ்ளோதான்‌."

"மேனேஜர்‌ அட்ஜஸ்ட்‌ பண்ணுனா இன்னும்‌ நல்ல சமபலம்‌ கிடைக்கும்னு நினைக்குறியா."

"அஸ்தவபிருல்லா.!! என்ன பேசுறீங்க நீங்க? நா அப்படியெல்லாம்‌ நினைச்சதே இல்லை."

"அப்டி நினைக்காம தான்‌ அவன்‌ கூட வெளிய போனியா.?"

"வெளிய போனதுக்கும் நீங்க பேசுறதுக்கு என்ன சம்மந்தம்‌. நான்‌ சாப்பிட தான்‌ போனேன்‌." 

அன்று அப்படியே பேசிப்பேசி சண்டை பெருசாக அவன் அவள்‌ கன்னத்தில்‌ ஓங்கி ஒரு அரை விட்டான்‌. கீழே விழுந்த அவள்‌. கண்களில்‌ இருந்து கண்ணீர்‌ ஆறாய்‌ ஓடியது. 

'இத்தனை நாள்‌ உத்தமியாக இருந்த எனக்கு இப்படி ஒரு சோதனையா? கடவுளே ஏன்‌ என்னை இப்படி சோதிக்கிறாய்‌?' என்று கடவுளை நொந்துகொண்டாள்‌. 

"இப்படி இஷ்டத்துக்கு வாழ்க்கை வாழணும்ன்னு நினச்சா அப்படியே வேலைய நிறுத்திருவேன்‌. நினைவுல வச்சிக்கோ" என்று சொல்லிவிட்டு போனை தூக்கி வீசினான்‌. 

அவள்‌ அங்கேயே வருத்தத்தில்‌ அழுதுகொண்டு இருந்தாள். 


தொடரும்...

Comments

Post a Comment

Popular posts from this blog

கில்லாடி மருமகள் 2 (இறுதி பாகம்)

கில்லாடி மருமகள் 1

என் குடும்பம் 47